
கவிஞர் பனித்துளி சங்கரின் மீள் காதல் கவிதைகள்
2006 & 2009
உனக்காகவே எல்லாரையும் இழந்தேன்
நீ என்னை இழப்பாய் என்று தெரியாமல்!
உன்னுடன் நான் இருக்க விரும்புவது
இரண்டே பொழுதுதான்.
இப்பொழுதும் எப்பொழுதும்....
கசப்புகள் மட்டுமே அதிகம் நிறைந்த
என் வாழ்வில்
உன் நினைவுகள் மட்டுமே
இனிமையானவை !....
புரிதல் இல்லாமல் பிரிந்து சென்றவளே
பிரிய முடியவில்லையடி
உன்னை புரிந்து கொண்டதால் !!!
அழுதாலும் தீராது என் சோகம்....
என்னை அழ வைக்கும்
உன் நினைவுகள் இருக்கும் வரையில்..
என்னை நீ எப்படி எல்லாம் காயபடுத்துகிறாய்
என்று உனக்கு தெரியாது...!
என் காயங்கள் உனக்கு
வலிக்க கூடாது என்று
உன் புன்னகையில் ஒளிந்து நிற்கிறேன்...!
உன் இதயத்தை கேட்டு பார் ஒவவொரு...