
மனிதம் கொன்ற மனிதர்கள் !..
நீ வாழ்ந்த உலகத்தில்
உணவுக்கும் உண்மையான உறவுக்கும் பஞ்சமில்லை ...
நீ மனிதன் என்றாலும் உன்னை அரவணைத்து
ஆனந்தமாய்தான் வைத்திருந்தது அந்த காடெனும் தாய்.....
நீ அங்கு வாழ்ந்தவரை எந்த ஐந்தறிவு உறவுகளும்
உன்னை துன்புறுத்தியதில்லை....
இயற்கை எனும் தேவதை உனக்கு தண்ணீரின் சுவையைத்
தவிர கண்ணீரை ஒருபோதும் கொடுத்ததில்லை ...
ஆனால்
மரம் கொன்று, இயற்கை தின்று, மனிதம் தொலைத்து,
தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அடையாளம்
தந்த ஆறறிவை எங்கோ கழற்றி வீசிவிட்டு.... எதற்கு வாழ்கிறோம் என்று அறியாமல்
இருட்டு உலகத்திற்குள் குருட்டுத் தனமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுவர்கள்
இல்லாத மனிநிலை பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற இந்த மனித இனம் வாழும் நரகத்திற்குள்
ஏன் வந்தாய் தோழா...??!!!
இவர்கள் வாழ்வது...