Monday, February 26, 2018

Tamil puthiya kavithaigal 2018 - மனிதன் என்னும் மிருகம்


மனிதம் கொன்ற மனிதர்கள் !..



நீ வாழ்ந்த உலகத்தில் உணவுக்கும் உண்மையான உறவுக்கும் பஞ்சமில்லை ... 

நீ மனிதன் என்றாலும் உன்னை அரவணைத்து ஆனந்தமாய்தான் வைத்திருந்தது அந்த காடெனும் தாய்.....

நீ அங்கு வாழ்ந்தவரை எந்த ஐந்தறிவு உறவுகளும் உன்னை துன்புறுத்தியதில்லை....

இயற்கை எனும் தேவதை உனக்கு தண்ணீரின் சுவையைத் தவிர கண்ணீரை ஒருபோதும் கொடுத்ததில்லை ... 
ஆனால் 
மரம் கொன்று, இயற்கை தின்று, மனிதம் தொலைத்து, 
தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அடையாளம் தந்த ஆறறிவை எங்கோ கழற்றி வீசிவிட்டு.... எதற்கு வாழ்கிறோம் என்று அறியாமல் இருட்டு உலகத்திற்குள் குருட்டுத் தனமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுவர்கள் இல்லாத மனிநிலை பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற இந்த மனித இனம் வாழும் நரகத்திற்குள் ஏன் வந்தாய் தோழா...??!!!

இவர்கள் வாழ்வது நகரம் என்று சொல்லி பீத்திக் கொள்வார்களேத் தவிர இவர்களுக்கு நாகரிகமும் தெரியாது நல்லவர்களையும் தெரியாது.....!


இவர்கள் உன்னை இந்த நாட்டை ஆளவிட்டாலும் விடுவார்களேத் தவிர... 
ஒருபோதும் உன் பசியை தீர்த்து பாதுகாப்பாய் வாழவிடமாட்டார்கள்...!!

இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் முகமூடி வாழ்கையே....!

இவர்கள் கொண்டாடுவது எல்லாம் கரைவேட்டி கொள்ளைக்காரர்களையும்.... காவிவேட்டி கொலைகாரர்களையும் மட்டுமே....
இவர்கள் தேடுவது எல்லாம் அடுத்து அவர்களின் மீதமிருக்கும் வாழ்க்கையை சிறந்த முறையில் சிரழிக்க போகிறவர்கள் யார் என்பதையே !...

இங்கு ஒருசில அறிவுகளே கொண்ட கோழி இனம் கூட தனது உறவிற்கு தீங்கு நேர்ந்தால் பல அடி தூரம் பறந்து அதை காக்கும்...
ஆனால் இந்த ஆறறிவு கொண்ட முட்டாள் இனமோ அவர்களின் மரணத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்து ரசிக்கும்...!!

பெரிதாக வேறொன்றும் உன் மரணத்திற்கு பின் சொல்ல தெரியவில்லை தோழா !..

அந்த காடெனும் தாய் உன்னைப் போன்ற ஒரு குழந்தையை மீண்டும் இழந்துவிடாமல் இந்த மனித அரக்கர்களிடமிருந்து பாதுகாத்து தன்னிடமே வைத்து வளர்க்கட்டும் !....


                          ... பனித்துளி சங்கர் ...



..............................................................

0 comments:

Post a Comment

shankarp071@gmail.com

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Macys Printable Coupons